கேரள மாநிலம் வைக்கத்தில் புனரமைக்கப்பட்ட பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகிய இருவரும் இணைந்து இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விசிக தலைவர் திருமாவளவன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய ஸ்டாலின், “2023-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி தோல் சீலை போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு விழா நாகர்கோவிலில் நடைபெற்றது.
நானும் சகாவு பினராயி விஜயனும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். வைக்கம் நூற்றாண்டு விழாவை மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று நான் குறிப்பிட்டு பேசினேன்.
2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி கேரள அரசின் சார்பில் மிகச்சிறப்பான விழாவாக ஏற்பாடு செய்து என்னையும் அழைத்திருந்தார் விஜயன். இப்போது எங்களது அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கிறார்.
இந்திய அளவில் ஆளுமை மிக்க தலைவர்களில் ஒருவராக விளங்கக்கூடியவர் பினராயி விஜயன். பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் கட்டுவதற்கான அனுமதியை தந்தது முதல் எல்லா முன்னெடுப்புகளுக்கும் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருக்கும் கேரள அரசுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வைக்கம் போராட்டம் எப்படி கம்பீரமானதோ அதைப்போலவே இந்த நினைவகத்தை கம்பீரமான அழகியலோடு அறிவுக் கருவூலமாக உருவாக்கியிருக்கக்கூடிய தமிழக அரசின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நான் மனதார பாராட்டுகிறேன்.
அவருக்கும் இந்த துறையின் அதிகாரிகள், அலுவலர்கள், கட்டுமான நிபுணர்கள் அனைவருக்கும் பாரட்டுகள். இதற்கான முன்னெடுப்புகளை மிக சிறப்பாக மேற்கொண்ட செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
Pushpa 2: ஆல் டைம் ரெக்கார்டு! ஓடிடி + ஹிந்தி உரிமை இத்தனை கோடியா?