சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கை முடக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 1) கண்டனம் தெரித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியினர், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சீமான் உட்பட, நாம் தமிழர் கட்சியின் இருபதுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்வதாக அந்நிறுவனம் நேற்று அறிவித்தது.
மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலில் சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமான், திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் கணக்கு முடக்கப்பட்டதாக விளக்கம் அளித்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள், ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை இன்று கண்டித்து பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.
ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்!” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னையில் 3வது நாளாக பால் விநியோகம் பாதிப்பு!
தேர்தல் வியூக நிபுணர் சுனிலுக்கு சிறப்பு பரிசு கொடுத்த சித்தராமையா