பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை, மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 9) கண்டனம் தெரிவித்துள்ளார். Stalin condemned Centra l fund
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியான பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிகளும் கொண்டு வரப்பட்டு அதன் உள்கட்டமைப்புகள் மற்றும் கல்வி செயல்பாடுகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. Stalin condemned Central fund
இந்த திட்டத்தில் இணைந்தால் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த நேரிடும் என்பதால், தமிழ்நாடு அரசு இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை. இதன்காரணமாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய பாஜக அரசின் அநீதியான அணுகுமுறைக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.
தேசிய கல்விக்கொள்கை, மும்மொழிக் கொள்கையை திணித்ததை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக மிரட்டல் விடுத்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்துள்ளார்கள். தங்களது உரிமைகளுக்காக போராடும் தமிழக மாணவர்களை தண்டிக்கிறார்கள்.
இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசாங்கமும், ஒரு அரசுக்கு எதிரான அரசியல் பழிவாங்கலுக்காக கல்விக்கான நிதியை இரக்கமின்றி முடக்கியதில்லை. தமிழ்நாடு மற்றும் தமிழக மக்களுக்கு எதிரான கட்சி பாஜக என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். Stalin condemned Central fund