அமைச்சர் பிடிஆரை ஐடி துறைக்கு மாற்றியது ஏன்? – காரணம் சொன்ன ஸ்டாலின்

Published On:

| By Selvam

Mk Stalin Clarifies PTR portfolio change

நிதித்துறை போல ஐடி துறையிலும் மாற்றங்கள் தேவைப்பட்டதால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஐடி துறைக்கு மாற்றினேன் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 23) தெரிவித்துள்ளார். Mk Stalin Clarifies PTR portfolio change

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில்  முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தகவல் தொழில்நுட்பத்தை முன்வைத்து நடைபெறும் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன்.

Mk Stalin Clarifies PTR portfolio change

மூன்று தலைமுறைகளாக நாட்டுக்கு தொண்டாற்றி வரும் குடும்பத்திற்கு சொந்தக்காரர் அவர். இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருந்த திருச்சி என்.ஐ.டி-யிலும், உலகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்.ஐ.டி-யிலும் படித்தவர்.

பல ஆண்டுகள் வெளிநாட்டில் படித்து வேலை செய்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டிற்கு திரும்பி வந்து இங்கேயும் தொழில், வர்த்தகம் என்று ஒதுங்கியிராமல் அவரது அப்பா, தாத்தா மாதிரியே அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழக மக்களின் நலனுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

நமது ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகளில் நிதியமைச்சராக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டவர். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் ஐடி துறைக்கு மாற்றினேன். அவரை நான் மாற்றியதற்கு காரணம், ஐடி துறையிலும் நிதித்துறை போல மாற்றங்கள் தேவைப்பட்டது.

அவருடைய தலைமையில், தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமானது.

நான் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்பதற்கு இந்த மாநாடே எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்”  என்றார்.

கடந்த 2023 மே 11-ஆம் தேதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வசம் இருந்த நிதித்துறை, தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் மனோ தங்கராஜ் வசம் இருந்த ஐடி துறை பழனிவேல் தியாகராஜனுக்கும் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

திமுகவின் தொங்கு சதையல்ல, காங்கிரஸ் – முதல் கூட்டத்தில் சீறிய செல்வப் பெருந்தகை

திருச்செந்தூர் முருகன் கோவில் மாசி தேரோட்டம் கோலாகலம்!

Mk Stalin Clarifies PTR portfolio change

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel