இந்திய வரலாற்று பேரவையின் 81 வது மாநாடு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இன்று (டிசம்பர் 27 ) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டை இன்று சூழ்ந்துள்ள ஆபத்து வரலாற்று திரிபு என்று கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர் “ வரலாறு என்பது வேலைக்காக , பட்டத்திற்காக , சம்பளத்திற்காக மட்டும் அல்ல, நம்மை நாமே அறிந்து கொள்வதற்காக வரலாற்றை கற்றுக்கொள்ள வேண்டும்.
பழமைவாதிகள் அல்ல
கடந்த கால வரலாற்றை படிப்பவர்களால் மட்டும் தான் நிகழ்கால வரலாற்றை படைக்க முடியும். வரலாற்று உணர்வுகளை ஊட்டுவது இன்றைய காலத்தின் தேவையாகும். பழம்பெருமைகள் மீது பற்று கொண்டவர்கள் தான் ஆனால் பழமைவாதிகள் அல்ல. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் அடிப்படையில் தான் பழம்பெருமைகளை நாங்கள் பேசுகிறோம்” என்றார்.
மேலும், கற்பனைக்கதைகளை சிலர் வரலாறு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அதனை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. இன்று நாட்டை சூழ்ந்துள்ள ஆபத்து என்பது வரலாற்று திரிபு தான். கல்வி, மொழி, பண்பாடு, அதிகாரம், பொருளாதாரம் அனைத்திலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகள் காப்பாற்றப்பட வேண்டும்.
மதவாத கட்சிகளை அனுமதிக்க மாட்டோம்
மதச்சார்பின்மை என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை மீறப்படுவது ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது. மதவாத கட்சியாக ஒரு கட்சி செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
மேலும், கீழடி, சிவகளை, ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் தமிழர்களின் பழங்கால நாகரிகத்தை பறைசாற்றுகின்றன.
ஆய்வின் அடிப்படையிலான வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தமிழ்நாடு அரசின் கடமையாக நினைத்து நாங்கள் செயல்படுகிறோம். தமிழினத்தின் , தமிழ்நாட்டின் பெருமைகளை மீட்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அடர் பனியில் உறைந்த வட மாநிலங்கள்!
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: எடப்பாடி ஆலோசனையின் நோக்கங்கள்!
DMK only support muslim and Christian so DMK is mathavatha party