ஈரோடு பிரகாஷை ஆதரித்து ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: செல்ஃபி எடுக்க குவிந்த கிட்ஸ்!

அரசியல்

ஈரோடு மாவட்டத்தில் இன்று (மார்ச் 31) காலை நடைபயிற்சியின் போது திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். நாள் ஒன்றுக்கு இரண்டு தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

அந்தகவகையில், சேலத்தில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது வருமான வரித்துறையை ஏவிவிட்டு பிரதமர் மோடி நோட்டீஸ் விடுகிறார். எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எதிர்த்து பேசினால் சிபிஐ, இடி, ஐடி ஆகிய அமைப்புகளை பயன்படுத்தி ரெய்டு விடுகிறார்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்தநிலையில், ஈரோடு, நாமக்கல், கரூர் வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று காலை ஈரோடு உழவர் சந்தை பகுதியில்  நடைபயிற்சி மேற்கொண்டு திமுக இளைஞரணி துணை செயலாளரும், ஈரோடு வேட்பாளருமான பிரகாஷை ஆதரித்து ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த மக்கள் ஸ்டாலினுடன் கைகுலுக்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். மார்க்கெட் வியாபாரிகளிடம் குறைகளை ஸ்டாலின் கேட்டறிந்தார். பொதுமக்கள் பலரும் ஸ்டாலிடம் மனுக்கள் கொடுத்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: கூந்தல்… கோடைக்கால பராமரிப்பு!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *