மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். mk stalin attack central government
கள ஆய்வுக்காக நெல்லை சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற அரசு நலத்திட்ட மற்றும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். mk stalin attack central government
அப்போது பேரிடரைச் சந்தித்த நெல்லைக்கு மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து பேசிய அவர்,
“2023-ஆம் ஆண்டு டிசம்பரில் எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று உங்களுக்கு தெரியும்!
அதனால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் எப்படியெல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்றும் உங்களுக்கு நன்றாக தெரியும்.
அந்த பாதிப்புகளிலிருந்து மீள, ஒன்றிய அரசிடம் நாங்கள் நிதி கேட்டோம். இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்தார்கள்! ஆனால், அவர்கள் உடனடியாக இடைக்கால நிதி உதவியைக் கூட செய்யவில்லை.
நம்முடைய நயினார் நாகேந்திரன் கோபித்துக்கொள்ளக் கூடாது. அவருக்கும் உண்மை தெரியும். ஆனால், அவர் பேசமாட்டார். நீங்கள் பேசுங்கள் என்றுதான் எனக்கு அனுமதி கொடுப்பார்.
இருந்தாலும், மாநில அரசின் நிதியை வைத்து நிவாரண பணிகளை நாங்கள் செய்தோம். தொடர்ந்து ஒன்றிய அரசிடம் நிதி கேட்டு வலியுறுத்தினோம். கொடுக்காத அவர்களை கண்டித்தோம். அப்போதும் வரவில்லை! நாடாளுமன்றத்திலும் பேசினோம். அப்போதும் வரவில்லை! ஏன், நீதிமன்றம் சென்றோம். அதன்பிறகுதான் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்தார்கள்.
அதுவும் எவ்வளவு? நாம் கேட்டது, 37 ஆயிரத்து 907 கோடி ரூபாய்! வேறு வழியில்லாமல் ஒன்றிய அரசு கொடுத்தது, எவ்வளவு கொடுத்தது வெறும் 276 கோடி ரூபாய்! நாங்கள் கேட்டதில் ஒரு விழுக்காட்டைக் கூட கொடுக்கவில்லை. இப்படிதான் ஒன்றிய அரசு நடந்துகொண்டு இருக்கிறது!
சரி போகட்டும்! இந்த பட்ஜெட்டிலாவது நாங்கள் கேட்ட நிதிகளை ஒதுக்கித் தருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் இல்லை! தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என்று ஒதுக்கிவிட்டார்கள்!
மீண்டும் மீண்டும் வஞ்சிக்கிறது, ஒன்றிய பா.ஜ.க. அரசு! அவர்களை பொறுத்தவரைக்கும், கூட்டணியில் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரும் மாநிலங்களுக்கும் மட்டும்தான் அறிவிப்புகளையும் நிதியையும் கொடுப்பார்கள். அதனால்தான் நாங்கள் கேட்கிறோம். என்ன கேட்கிறோம்?
இந்தியாவின் வரைபடத்தில் மட்டும், தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசாங்கம் வெளியிடும் நிதிநிலை அறிக்கையில் இருக்க வேண்டாமா? ஒன்றிய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டின் பெயர் இருக்க வேண்டாமா? தமிழ்நாட்டிற்கு சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்க மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என்று நினைக்கிறார்களா? இப்படி நாங்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும், பா.ஜ.க.-விடம் இருந்து எந்த பதிலும் வராது.
மத்திய அரசில் அல்வாmk stalin attack central government

திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் புகழ்பெற்றது. ஆனால், இப்போது, மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வாதான் அதைவிட புகழ்பெற்றதாக இருக்கிறது! நம்முடைய திராவிட மாடல் அரசை பொருத்தவரைக்கும் – ஒன்றிய அரசை பொருட்படுத்தாமல், நமக்கு நாமே-என்று தமிழ்நாட்டை மேம்படுத்தி வருகிறோம்.
அதனால்தான், ஒன்றிய அரசு வெளியிடும் எல்லா புள்ளிவிவரங்களிலும் முன்னணியில் இருக்கிறோம்! அதற்கு காரணம், வாக்களித்த மக்களான உங்களுக்கு, நாங்கள் உண்மையாக இருக்கிறோம்.
ஒன்றிய அரசு மேல் குறை சொல்லிக்கொண்டு எந்த திட்டத்தையும் உருவாக்காமல் விட்டுவிடவில்லை. நாளுக்கு நாள் புது புது திட்டங்கள், வந்துக்கொண்டே இருக்கிறது! நாங்கள் உருவாக்கிக்கொண்டே இருப்போம்” என குறிப்பிட்டார்.
மேலும் அவர், “ஒரு பக்கம் இப்படி நாங்கள் உழைத்துக்கொண்டு இருந்தால், மற்றொரு பக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் எங்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள். அவர்களுக்கு பதிலுக்குப் பதில் பேசி, நம்முடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை.
என்னை பொறுத்தவரைக்கும், நான் அழுத்தம் திருத்தமாக சொல்வது. மற்றவர்கள் போன்று, “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை”-என்று இறுமாப்போடு பேசுபவன் இல்லை இந்த ஸ்டாலின். தோழமையில் இருப்பவர்கள் பேசினாலும் சரி. எதிர்முகாமில் இருப்பவர்கள் பேசினாலும் சரி. அன்பாக பேசினாலும் சரி. கோபமாக பேசினாலும் சரி. அவர்கள் பேசுவதில் நியாயம் இருந்தால் – மக்களுக்கு நன்மை இருந்தால் – அதையெல்லாம் செய்து கொடுக்கவேண்டும் என்று நினைப்பவன்தான் நான்!
நமக்கு எதிராக பேசிவிட்டார்களே என்று காழ்ப்புணர்வோடு நடந்துக்கொள்பவன் இல்லை நான். எனக்கு தமிழ்நாடும் – தமிழ்நாட்டு மக்களும் வளரவேண்டும்! அவ்வளவுதான்!” என கூறினார். mk stalin attack central government