விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஒட்டி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 5) காணொலி பிரச்சார வீடியோ வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், ஜூலை மாதம் முதல் 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
ஸ்டாலின் பேசியபோது, “நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்து தரப்பட்டுள்ள நலத்திட்டங்களை விவரித்து சொல்ல வேண்டும் என்றால், நேரம் போதாது.
1.16 கோடி மகளிர் மாதம்தோறும் மகளிர் உரிமைத்தொகை பெறுகிறார்கள். இந்த மாதத்தில் இருந்து புதிதாக 1.48 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை கொடுக்க போகிறோம்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக இளைஞர்கள் அனைத்து விதமான வேலைகளையும் பெற தகுதி உள்ளவர்களாக உயர்த்தப்பட்டு வருகிறார்கள்.
புதுமைப் பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் படித்து கல்லூரி கல்விக்கு வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதேபோல மாணவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக உதவித்தொகை தரப்போகிறோம். இப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு நேரடி பலன் கிடைக்கும் வகையில், நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி பயணத்தை தவிர்த்த ஸ்டாலின்: வேட்பாளரை ஆதரித்து காணொலி பிரச்சாரம்!
சென்னை : பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை!