தமிழர்களுக்கு பெருமை… ஸ்டாலின் வெளியிட்ட அந்த முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Selvam

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) தெரிவித்துள்ளார்.

‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது, “தமிழர்களின் தொன்மையை இப்போது நான் அறிவிக்க போகிறேன். தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, உலகிற்கே மறுபடியும் சொல்கிறேன்.

தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கியது. 5,300 ஆண்டுகளுக்கு முன்பாகவே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் தமிழ் நிலத்தில் அறிமுகமாகியிருந்தது.

இப்போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் அண்மையில் கிடைக்கப்பெற்ற காலக்கணக்கீடுகள், இரும்பு அறிமுகமான காலத்தை கி.மு 4000 ஆண்டின் முற்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.

தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பாக இரும்பு அறிமுகமாயிருக்கிறது என்பதை தொல்லியல் முடிவுகள் உறுதியாக சொல்கிறது” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel