காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

அரசியல்

காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் முதல் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 2) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தங்கம் தென்னரசு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு, காலநிலை மாற்ற நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காற்று மாசுபாடு குறைத்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சரிசெய்வது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “காலநிலை அபாயங்களை உலகளவில் எதிர்கொள்ளக்கூடிய 50 இடங்களின் பட்டியலில் இந்தியாவில் மட்டும் 9 இடங்கள் இருக்கின்றன.

தமிழ்நாடு 36-வது இடத்தில் இருக்கிறது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவத்தை, இது அடிக்கோடிட்டு காட்டுகிறது.

இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் இந்த அரசு காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்கும், தகவமைப்பதற்கும், விரைவான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் சமூகத்தில் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை செயல்படுத்த போகிறோம். அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்.

கடல் அரிப்பை தடுக்கவும், கடற்கரையின் பல்லுயிரை பேணவும் பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும். வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை நாம் கையாள்வது போல வெப்ப அலைகளையும் புதிய நோய்களையும் கையாள தயாராக வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு துறைகளும் எவ்வளவு கார்பன்களை வெளியிடுகிறது என்பதை அறிவியல் பூர்வமாக வெளியிட உள்ளோம்.” என்று தெரிவித்தார்.

செல்வம்

குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானம்: இன்று விசாரணை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *