கோவையில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஆகியோரும் தமிழகம் வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ராகுல் காந்தி 12ஆம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் கூட்டாகத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கோவை செட்டிபாளையம் எல்&டி பைபாஸ் சாலை பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பங்கேற்று இந்தியா கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அங்கே நான் பிரச்சாரம் செய்தாகணும்: அமித் ஷா டிக் அடித்துக் கொடுத்த தொகுதி இதுதான்!
AK: ஜஸ்ட் மிஸ்ஸில் ‘உயிர்’ தப்பிய அஜித்- ஆரவ்… வீடியோ பார்த்து பதறும் ரசிகர்கள்!