சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (மார்ச் 15) ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நாட்களும், மார்ச் மாதம் ஒரு நாளும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையில் செயல்படுத்தவேண்டிய திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்தநிலையில், மார்ச் 20-ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதில் அறிவிக்கப்பட வேண்டிய திட்டங்கள், மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்குதல், உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
செல்வம்
ஆஸ்கர் வென்ற ‘ஆர்.ஆர்.ஆர்’ முதல் ‘அவதார்’ வரை…எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
வித்தியாசமாக மரத்தில் ஏறிய பாம்பு: வீடியோ வைரல்!