முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (ஏப்ரல் 28) சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி சென்றடைந்த முதல்வரை திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, வரும் ஜூன் 5 ஆம் தேதி கிண்டியில் கட்டப்பட்டுள்ள உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு முதல்வர் மீண்டும் சென்னை திரும்புவதற்காக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். மும்பை செல்வதற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அங்கு வந்திருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கேயே சிறிது நேரம் பேசியுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் நிர்மலா சீதாராமனின் அதிகாரப்பூர்வ அலுவலக ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
மோனிஷா
மீண்டும் பள்ளிகள் திறக்கும் தேதி: அமைச்சர் அறிவிப்பு!
குடியரசுத் தலைவரை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்