முதல்வர் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் எப்போது? அப்பல்லோ

அரசியல்

முதல்வர் ஸ்டாலின் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சி மற்றும் கூட்டங்களில் கலந்து கொண்டு வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு வயிறு வலி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அவரை வயிறு சிகிச்சை நிபுணர் பழனிசாமி பரிசோதித்து சிகிச்சை அளித்தார். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்நிலையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பிரியா

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *