மிசோரம் துணை முதல்வர் தாவ்ன்லுயாவை, ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் ச்சுனாவ்மா 909 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் இன்று (டிசம்பர் 4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதியம் 1 மணி நிலவரப்படி, ஜோரம் மக்கள் இயக்கம் 12 இடங்களில் வெற்றியும், 16 இடங்களில் முன்னிலையும் வகித்து வருகிறது. ஆளும் மிசோ தேசிய முன்னணி 2 இடங்களில் வெற்றியும் 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக ஒரு இடத்தில் முன்னிலை மற்றும் ஒரு இடத்தில் வெற்றியும், காங்கிரஸ் ஒரு இடத்தில் முன்னிலையும் வகிக்கிறது.
துய்ச்சாங் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் தாவ்ன்லுயாவை ஜோரம் மக்கள் இயக்க வேட்பாளர் ச்சுனாவ்மா 909 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
ஆளும் கட்சியை சேர்ந்த துணை முதல்வர் வேட்பாளர் தோல்வியை தழுவியிருப்பது மிசோ தேசிய முன்னணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மிசோரத்தில் பெரும்பான்மையாக வாழும் மிசோ மக்களும், மணிப்பூரில் வாழும் குக்கிகளும், மியான்மர் நாட்டின் சின் மக்களும் ‘சோ’ என்ற ஓரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன மக்கள் தாக்கப்பட்டது மிசோரமில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் பாஜகவுடன் கூட்டணி வகித்த ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜோரம்தங்கா பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதை தவிர்த்திருந்தார். தேர்தல் முடிவுகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி பின்னடைவை சந்தித்து வருவது மணிப்பூர் விவகாரம் மிசோரம் தேர்தலில் எதிரொலித்துள்ளதை காட்டுகிறது.
செல்வம்
IND vs AUS: தொடரை கைப்பற்றிய இந்தியா
தை மாதம் நெருங்குது… தங்கம் விலை எகிறுது!