சிறுபான்மை ஆணையத் துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காக்கவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறுபான்மை ஆணையம் திமுக அரசால் அமைக்கப்பட்டது.
சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகச் செயல்பட்டு வரும் இந்த ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.பீட்டர் இருந்து வருகிறார்.
அதன் துணைத் தலைவராக முன்னாள் எம்பி மஸ்தான் இருந்தார். அண்மையில் மஸ்தான், உறவினரால் கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் காலியான அந்த இடத்துக்கு பாடகர் இறையன்பன் குத்தூஸை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கலை.ரா
பேட்டிங்கா? பவுலிங்கா?: ரோகித் ஷர்மாவின் குழப்ப நொடிகள்!
இடைத்தேர்தல்: மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய இளங்கோவன்