மின்னம்பலம் மெகா சர்வே: ஸ்ரீபெரும்புதூரில் முடிசூடப் போவது யார்?

Published On:

| By Kavi

2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம், மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் டாக்டர் பிரேம்குமார் போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.என்.வேணுகோபால் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெ.ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார்? என்ற கேள்வியினை பரவலாக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  மதுரவாயல்,  அம்பத்தூர்,  ஆலந்தூர்,  பல்லாவரம்,  தாம்பரம்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…

 

திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 43% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால் 19% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெ.ரவிச்சந்திரன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இந்த முறையும் டி.ஆர்.பாலு வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

ஸ்ரீபெரும்புதூர்: முடிசூடப் போவது யார்? | Minnambalam Mega Survey 2024 | Sriperumbudur

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே: நாமக்கல் வெற்றிநடை போடுவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தென்காசி…. வெற்றிச் சாரல் யார் மீது?

மின்னம்பலம் மெகா சர்வே: பொள்ளாச்சியில் யார் ஆட்சி?

மின்னம்பலம் மெகா சர்வே: காஞ்சிபுரம்… கள நாயகன் யார்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel