minnambalam mega survey south chennai constituency

மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை… தன் சென்னை ஆக்குவது யார்?

40 தொகுதி மெகா சர்வே முடிவு அரசியல்

2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது.

இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார்.

திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்

உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது

தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.

அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்

பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.

1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.

மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்  minnambalam.com வலைதளத்தில்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு?

மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்?

மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர்… பட்டாசு கொளுத்துவது யார்?

மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி?

 

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *