2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது.
இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார்.
திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளான சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), எடப்பாடி, வீரபாண்டி மற்றும் ஓமலூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…
திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார்.
அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும்
பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன.
1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.
மின்னம்பலம் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் minnambalam.com வலைதளத்தில்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்?
மின்னம்பலம் சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்?
மின்னம்பலம் மெகா சர்வே: மயிலாடுதுறை… வெற்றி அறுவடை யாருக்கு?
மின்னம்பலம் மெகா சர்வே: பெரம்பலூர் ரேஸில் வின்னர் யார்?