மின்னம்பலம் செய்திப்படியே அமைச்சர்கள் துறை மாற்றம்!

அரசியல்

தமிழக அமைச்சரவையில் உதயநிதி  ஸ்டாலின் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவியேற்ற  பிறகு 11 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. 

கடந்த சில நாட்களாக மின்னம்பலம் இணைய இதழில் அமைச்சர்களின் துறை மாற்றம் பற்றி வெளியிடப்பட்ட செய்திகள் இன்று (டிசம்பர் 14)  நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அப்படியே நடந்திருக்கின்றன.   

புதிய அமைச்சர் உதயநிதிக்கு ஏற்கனவே சுற்றுசூழல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையை வைத்திருந்த அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்து இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பிரித்து அளிக்கப்பட்டுள்ளது.

ministers portfolio changed list

கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ, பெரியசாமிக்கு  ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன்  கூட்டுறவுத் துறை அமைச்சராக  மாற்றப்பட்டிருக்கிறார்.

வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரன் சுற்றுலாத் துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ministers portfolio changed list

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம்  இருந்து சிஎம்டிஏ  அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் இருந்த புள்ளியியல் துறை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ministers portfolio changed list

கைத்தறித் துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியிடம் இருந்த காதி கிராமத் தொழில் வாரியம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மின்னம்பலம் இணைய இதழில் வெளியிடப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பான செய்திகள் 100 சதவீதம் அப்படியே நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-வேந்தன்

ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் : அமைச்சர் உதயநிதி

மாமன்னன் தான் கடைசி படம்: அமைச்சர் உதயநிதி சினிமாவுக்கு டாடா

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0

1 thought on “மின்னம்பலம் செய்திப்படியே அமைச்சர்கள் துறை மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *