ஒடிசா சென்றடைந்த தமிழக அமைச்சர்கள்!

அரசியல் இந்தியா

ரயில் விபத்து நடந்த இடத்திற்கு சென்ற பிறகே முழுமையான தகவல் கிடைக்கும் என்று தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் இன்று(ஜூன் 3) ஒடிசா சென்றனர்.

தமிழக போக்குவரத்து செயலாளர், வருவாய்த்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் உடன் சென்றனர். மீட்பு பணிகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக பயணிகளுக்கு தேவையான உதவிகளை இந்த குழு செய்கிறது. விபத்து நடைபெற்ற இடத்திற்கும் நேரடியாக சென்று தமிழகக் குழு பார்வையிடுகிறது.

Ministers of Tamil Nadu reached Odisha

இந்நிலையில், ஒடிசா சென்றடைந்த அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ” ஒடிசா மற்றும் தமிழக அரசு இரண்டும் சேர்ந்து மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றன.

எந்தெந்த மாநிலத்தில் இருந்து எத்தனை பேர் ரயில் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் விபத்து நடைபெற்ற இடத்திற்கு சென்ற பிறகு தான் தெரியும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களை இங்கு இருந்து அழைத்து செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0