மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிறந்தநாளை சக அமைச்சர்கள் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று (மார்ச் 7 ) தனது 57 -வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர் தனது பிறந்தநாளை இன்று மதுரை விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அவர்கள் கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: நண்டு பிரட்டல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!