பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

Published On:

| By Jegadeesh

பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 28 )சந்தித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று (பிப்ரவரி 27 )டெல்லி சென்றார்.

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நேற்று இரவு கலந்து கொண்டார்.

இந்நிலையில், இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பா.ஜ.கவுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு- மோதல் நிலவி வரும் சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை தனியாக சென்று சந்தித்து பேசுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share