இன்று (டிசம்பர் 14) அமைச்சராக பொறுப்பேற்ற பின் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) பதவி ஏற்றுக்கொண்டார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கம், வறுமை ஒழிப்பு, கிராமப்புற கடன் திட்டத்துறை உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பின்னர் மெரினா கடற்கரைக்குச் சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து தலைமைச் செயலகம் வந்தடைந்தார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை மூத்த அமைச்சர் துரைமுருகன், அமைச்சருக்கான இருக்கையில் அமரவைத்தார்.
தொடர்ந்து அமைச்சர்கள் பொன்னாடை போர்த்தி மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.
முதல் கோப்பாக முதல்வர் கோப்பைக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்து, வயது முதிர்ந்த விளையாட்டு வீரர்கள் 9 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் உதவி
தொகை வழங்கக் கையெழுத்திட்டார். அதுபோன்று முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
பிரியா
மின்னம்பலம் செய்திப்படியே அமைச்சர்கள் துறை மாற்றம்!