அரிவாளால் வெட்டப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திர செல்விக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திர செல்வியை சபாநாயகர் அப்பாவு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவன் தாயாரிடம் தொலைபேசியில் பேசி “தைரியமா இருங்க…மாணவனை நாங்க பார்த்துக்குறோம்” என உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவன் மற்றும் அவரது தங்கையை சந்தித்து ஆறுதல் கூறினோம். முதல்வர் ஸ்டாலின் மாணவனின் தாயாரிடம் போனில் பேசி அரசின் சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதியளித்தார். மருத்துவமனை சார்பில் மாணவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் உடல் நலன் தேறி வருகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
நெல்லை சரவணன்
நடிகர் தாமுவின் பேச்சு… கண் கலங்கிய பெண் காவலர்!
“தைரியமா இருங்க…” நாங்குநேரி மாணவனின் தாயுடன் ஸ்டாலின் செல்போன் பேச்சு!