ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 6) சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ரூ.30 கோடியில் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி பெறுநர்கள் பயன்பாட்டிற்காக 600 படுக்கைகள் கொண்ட தங்கும் இடங்கள் உருவாக்கப்படும்.
ரூ.20 கோடியில் சிப்காட் இருங்காட்டுக்கோட்டை மற்றும் செய்யாறு தொழிற்பூங்காக்களில் தொழிலாளர்களுக்கு 200 படுக்கைகள் கொண்ட 2 தங்குமிடங்கள் அமைக்கப்படும்.
ரூ.20 கோடியில் சிப்காட் நிறுவனம், நீர் பயன்பாட்டை கண்காணிக்கவும் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்புகள் உருவாக்கப்படும்.
ரூ.20 கோடியில் மணப்பாறை, தேனி, திண்டிவனம், சூளகிரி சிப்காட்களில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்.
ரூ.4.5 கோடியில் விருதுநகர், சூளகிரி, தேனி, சிப்காட் தொழிற்பூங்காக்களில் நிர்வாக அலுவலகம் கட்டப்படும்.
ரூ.70 கோடியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.
ரூ.10 கோடியில் சென்னை, கோயம்புத்தூர் மாவட்டங்களில் டைசன் உயிரியின் முகவரி என்ற புத்தக மையம் அமைக்கப்படும்.
ரூ.600 கோடி மதிப்பீட்டி திருச்சியில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
ரூ.4 கோடி மதிப்பீட்டில் அரியலூர் சிமெண்ட் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி புதிய வளாக சுவர் கட்டப்படும்.
செல்வம்
”மாணவிகள் விரல்கள் பிடித்து பரத முத்திரை…”: கலாஷேத்ரா ஹரிபத்மனின் முழு வாக்குமூலம்!
ஹரிபத்மனுக்கு ஆதரவாக நடிகை அபிராமி: கலாஷேத்ராவில் நடப்பது என்ன?