கூடுதல் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் இன்று(ஜூன் 17) முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்தநிலையில், அவர் வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமிக்கும் பகிர்ந்தளித்து உடல்நலக்குறைவால் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தவறானது என்று திருப்பி அனுப்பினார். இதனை தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை ஒதுக்க ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி கிரிமினல் வழக்குகளை செந்தில் பாலாஜி எதிர்கொண்டு நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்தநிலையில், தமிழக அரசு நேற்று(ஜூன் 16) செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கியும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் அரசாணை பிறப்பித்தது.
இந்தநிலையில் கூடுதல் இலாகா ஒதுக்கப்பட்ட அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
செல்வம்
ஒருவேளை… அரசியலுக்கு இடைவேளை விட்ட விஜய்
சென்னை வெயில்: பிரதீப் ஜான் முக்கிய அறிவிப்பு!
எது முக்கியம்? செய்யும் செயலா? செய்யும் விதமா?