“ரூ.108 கோடியில் நான்கு சிட்கோ தொழிற்பேட்டைகள்”: தா.மோ.அன்பரசன்

அரசியல்

ரூ.108.2 கோடி மதிப்பீட்டில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மற்றும் தொழில்துறை மானியக்கோரிக்கை இன்று (ஏப்ரல் 6) சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன பொருட்களை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த மெய்நிகர் கண்காட்சியகம் உருவாக்கப்படும்.

ரூ.4 கோடியில் தென்னை நார் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய பரிசோதனைக்கூடம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.

ரூ.4.20 கோடியில் மதுரை மாவட்டம் செக்காநூரணியில் மரவேலைப்பாடு செய்யும் மகளிர் குழுமத்திற்கான பொது வசதி மையம் ஏற்படுத்தப்படும்.

ரூ.3.39 கோடியில் வேலூர் மாவட்டம் கரசமங்கலத்தில் மண்பாண்ட குழுமம் அமைக்கப்படும்.

மகளிர் தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ரூ.1.15 கோடியில் மகளிர் எம்ராய்டரிங் குழுமம் அமைக்கப்படும்.

ரூ.1 கோடியில் வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தில் தேன் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்.

கோவை மாவட்டத்தில் மாநில அரசு மானியத்துடன் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டை பொருட்கள் குழுமம் அமைக்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடியில் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.3 கோடியில் விசைத்தறி குழுமம் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டின் புத்தொழில் நிறுவங்களுக்கு தேவையான வளங்களை உலக அளவில் ஒருங்கிணைக்க துபாயில் புத்தொழில் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படும்.

பழங்குடியினர் பட்டியலினத்தவர் புத்தொழில் நிதி ரூ.30 கோடியிலிருந்து ரூ.50 கோடியாக உயர்த்தப்படும்.

ரூ.108.2 கோடியில் புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதனால் 6200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.48 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுந்தொழில் முனைவோர்கள் தேவையை பூர்த்தி செய்து வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும்.

செல்வம்

நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக தலைமையில் கூட்டணி”: அண்ணாமலை

மிரட்டுகிறார் வேல்முருகன்: சபாநாயகர்! கேலி செய்கிறார் சபாநாயகர்: வேல்முருகன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *