தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் உடலுக்கு செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
நீட் தேர்வில் குறைவான மார்க் எடுத்த தன்னுடைய மகளை எப்படி மெடிக்கல் காலேஜில் சேர்ப்பது என்ற கவலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் இன்று (ஜூலை 7) தற்கொலை செய்து கொண்டார்.
விஜயகுமார் தற்கொலையின் காரணம் என்ன என்பது தொடர்பான செய்தியை எக்ஸ்குளூசிவ் ஆக நீட் தேர்வில் மகள் மார்க்: மன உளைச்சலில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை! என்ற தலைப்பில் நமது மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
இச்சூழலில், தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடற்கூராய்வு கோவை அரசு மருத்துவமனையில் கோட்டாட்சியர் , தடயவியல் துறையினர் முன்னிலையில் நிறைவுபெற்ற நிலையில், தற்போது இவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், விஜயகுமாரின் உடலுக்கு , செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், மேற்கு மண்டல ஐஜி, மாநகர காவல் ஆணையர், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட எஸ்.பி.க்கள் அஞ்சலி செலுத்தினர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
நீட் தேர்வில் மகள் மார்க்: மன உளைச்சலில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை!
மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை ரத்து!