15 கி.மீ நடந்து சென்று மருத்துவமனையில் மா.சு ஆய்வு!

அரசியல்

அமைச்சர் மா. சுப்பிரமணியன் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

திருநெல்வேலியில் ரூ. 330 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா. சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு சென்றுள்ளார்.

இன்று (செப்டம்பர் 8) காலையில் கோவில்பட்டி அருகே உள்ள திட்டங்குளம் பகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடை பயிற்சி மேற்கொண்டார்.

சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று அவர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். 

மருத்துவமனையில் உள்ள வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து அங்கிருந்தவர்களிடம் மா.சுப்ரமணியன் கேட்டறிந்தார். அமைச்சர் சென்றபோது சில பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது.

விரைவில் அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை வருகை பதிவேட்டில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.

அமைச்சர் மா.சு.வை பொறுத்தவரை உடற்பயிற்சி, வாக்கிங் செல்வதில் அதிக கவனம் செலுத்துபவர். மாரத்தான் போட்டிகளிலும் கலந்துகொள்வார். இந்நிலையில், இன்று நடந்து சென்றே மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

கலை.ரா

சிசேரியன் பிரசவங்களைத் தவிர்க்க கர்ப்பிணிகள் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *