தமிழகத்தில் போக்குவரத்து சேவையில் பாதிப்பில்லாமல் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜனவரி 9) தெரிவித்துள்ளார். minister sivasankar says buses operate smoothly
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் குறித்து நியூஸ் 18 செய்தி தொலைக்காட்சிக்கு அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டியில்,
“பொதுமக்கள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இன்று அதிகாலை முதலே அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுடனும் பேசி வருகிறேன். எந்த பகுதியிலும் பாதிப்பு இல்லை. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.
பொங்கலுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து நேற்று (ஜனவரி 8) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மக்கள் அச்சப்படாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய அனைத்து நடவடிககைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், அதிமுக தொழிற்சங்கம் தான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது.
மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அனைத்து பேருந்துகளையும் அரசு ஓட்டுநர்கள் தான் இயக்கி வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வண்டலூர் உயிரியல் பூங்கா விடுமுறை நாளிலும் திறந்திருக்கும்!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: பயணிகள் அவதி!
சென்னை: குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய குறைதீர் முகாம் எப்போது?
பியூட்டி டிப்ஸ்: வேக்ஸிங் செய்ய போறிங்களா… இந்த விஷயங்களை மறக்காதீங்க!
minister sivasankar says buses operate smoothly
முதல்வருக்கு நன்றி