Minister Sivasankar replied to Annamalai

ரூ.200 கோடி ஊழலா?: அண்ணாமலைக்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்

அரசியல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரம்பலூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடை பயணத்தின்போது அரசு போக்குவரத்து கழகத்தில் வாகன உதிரிபாகங்கள் வாங்கியதில் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் 2000 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் முதற்கட்டமாக 1600 புதிய பேருந்துகள் இன்னும் இரண்டு மாதத்திற்குள் இயக்கப்படுவது உறுதி என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் அண்ணாமலை குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியபோது,

“அண்ணாமலை தனது சுய லாபத்துக்காக இதுபோன்று பல்வேறு இடங்களில் தமிழக அமைச்சர்களை பற்றி அவதூறுகளை பரப்பி வருகிறார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் பேசி வருவது அரசியல் சுய லாபத்துக்காகவும் பரபரப்புக்காகவும்தான்.

தமிழ்நாட்டில் சுமார் 1,700 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படுபவை என்பது தவறான கருத்து. கொரோனா காலத்தில் இரண்டாண்டுகள் அவை பணிமனையிலேயே நிறுத்தப்பட்டிருந்தவை என்பதால் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் அந்தப் பேருந்துகளை பழுது நீக்கி இயக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழகத்தில் முதற்கட்டமாக இன்னும் இரண்டு மாதங்களில் 1,600 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டவுடன் பழைய பேருந்துகள் படிப்படியாக கழிக்கப்படும்.

10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர் பணியிடங்கள் துளிக்கூட நிரப்பப்படாத நிலையில் தற்போது முதற்கட்டமாக விரைவு போக்குவரத்து கழகத்துக்காக 685 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வரும் 19ஆம் தேதி அதற்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் கூடிய விரைவில் மேலும் 2,500 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜ்

பியூட்டி டிப்ஸ்: பாத வெடிப்புக்கு குட் பை சொல்லலாம்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *