தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஹேக் செய்யப்பட்ட நிலையில், தீவிர முயற்சிக்கு பிறகு இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமைச்சர், நாள்தோறும் தான் பங்குபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம்.
அவரது பக்கத்தை 2 லட்சத்துக்கும் அதிகமானோரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, கிரிப்டோகரன்சி தொடர்பாக பதிவிடப்பட்டிருந்தது.
லும் ட்விட்டரில் அவரது கணக்கின் பெயர் ’வேரியோரியஸ்’ என்று மாற்றப்பட்டதோடு, கொரோனாவுக்காக நிதி திரட்டப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தப் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. எங்கள் ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சி குறித்த பதிவுகள் வந்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்கை மீட்கும்படி சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டது.

அதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு தற்போது மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவரது பக்கத்தில் மர்மநபர்கள் பதிவிட்டிருந்த பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அன்புள்ள அனைவருக்கும், எனது டிவிட்டர் கணக்கு இப்போது மீட்டெடுக்கப்பட்டு மீட்டமைக்கப்பட்டுள்ளது.
உங்கள் அக்கறைக்கும் அன்பான ஆதரவிற்கும் நன்றி. ட்விட்டர் பக்கத்தை மீட்டெடுக்க உதவிய மாநில சைபர் கிரைம் பிரிவு, ட்விட்டர் அதிகாரிகள் மற்றும் அனைவருக்கும் மிக்க நன்றி.” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அண்ணாமலை பற்றி பேசினால் நேரம் வீண்: அமைச்சர் செந்தில் பாலாஜி