செந்தில் பாலாஜி ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

அரசியல்

மின்சாரத்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு இன்று (செப்டம்பர் 4) ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் 4) அதிகாலை 2.20 மணியளவில், அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டர் கணக்கு Variorius என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

அந்த ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், “நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம்.

அனைத்துப் பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.” என்று பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

minister senthil balaji twitter

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து, திமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில்,  “மாண்புமிகு அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நாங்கள் ட்விட்டர் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளோம். அமைச்சர் செந்தில்பாலாஜி ட்விட்டர் கணக்கு விரைவில் மீட்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

minister senthil balaji twitter

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கரூர்  தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக செந்தில் பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் திமுக அமைச்சரவையில், மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து விலகி செந்தில்பாலாஜி தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

மேலும், செந்தில்பாலாஜி 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

செந்தில்பாலாஜிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மிஸ் ஆன அண்ணாமலை, ஏன்? திடுக் பின்னணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *