அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 5 நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 7) உத்தரவிட்டது.
இந்நிலையில் விசாரணை நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனு ஒன்று தாக்கல் செய்தது அமலாக்கத் துறை. அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலையும் இணைத்திருந்தது.
இந்த மனுவை இன்று (ஆகஸ்ட் 7) பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரித்தார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், ‘அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்கும் நாட்களில் ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை கூட செந்தில் பாலாஜியின் உடல் நிலை பற்றி கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என உச்ச நீதிமன்றம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி அல்லி, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அமலாக்கத் துறையினர், செந்தில் பாலாஜி உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரை துன்புறுத்தக் கூடாது எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து உத்தரவிட்டார்.
பிரியா
சாதாரண கைதிகளுடன் இம்ரான் கான்: கோபத்தில் தொண்டர்கள்!
காவிரி நீர் – திமுக அரசுக்கு பொறுப்பில்லை : ஓபிஎஸ்