அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜனவரி 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 13-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்.
செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 4-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 13-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மஹூவா மொய்த்ரா தகுதி நீக்க வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஒத்திவைப்பு!
கட்சி பணி, மாற்று அரசியல்: பிரேமலதாவுக்கு ஈபிஎஸ் அண்ணாமலை வாழ்த்து!