செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகும் அமலாக்கத்துறை மூர்க்கத்தனமாக செயல்படுவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு மற்றும் 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய வழக்குகளில் இன்று (ஜூன் 16) சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும் ஜூன் 23-ஆம் தேதி வரை 8 நாட்கள் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பிற்கு பிறகு திமுக வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராகி, சர்ஜரி செய்ய உள்ளதால் அமலாக்கத்துறை காவலுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்தார்.
இருப்பினும் அவருக்கு ஜூன் 23-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு 3 அல்லது 4 நாட்களுக்குள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் விசாரணையின் போது அமலாக்கத்துறை அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றக்கூடாது என்று கோரிக்கை வைத்தோம்.
மருத்துவமனையிலிருந்து மட்டும் தான் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும். அவரை விசாரணைக்காக வெளியே அழைத்து செல்லக்கூடாது என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி நிபந்தனை விதித்தார்.
செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்த பிறகும் அவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பும் கீழமை நீதிமன்ற தீர்ப்பும் முரணாக உள்ளது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
தண்ணீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி!
சவுக்கு சங்கருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
தீம்கா அரசின் முடிவுரைகளை சரவணன் சார் மாதிரி வக்கீல் எழுதுவது சால பொறுத்தம்…ஆறுபடை வீட்டில் ஒவ்வாத ஒரு ஜென்மம்..