புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று (அக்டோபர் 9) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். ஏற்கனவே அவருக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறைத்துறை மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்துள்ளார்கள்.
சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரையின் படி செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு இன்று அதிகாலை 4.45 மணிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இசிஜி உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் தேவையான சிகிச்சைகளையும் மருத்துவர்கள் அளித்து வருகிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்
பெண் பணியாளர்களின் பிரச்சினைகள்: பரிசீலிக்கும் ரயில்வே!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சட்டப்பேரவை இன்று கூடுகிறது: கருப்பு சட்டையுடன் அதிமுக?