அமைச்சர் சேகர்பாபு அண்ணன் தற்கொலை: காரணம் என்ன?

அரசியல்

சென்னையில் அமைச்சர் சேகர்பாபுவின் அண்ணன் நேற்றிரவு (செப்டம்பர் 26) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக அரசின் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் சேகர்பாபு.

இவரது அண்ணன் பி.கே.தேவராஜ். இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், அவர் தனது வீட்டில் நேற்றிரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தேவராஜின் குடும்பத்தினர் தெரிவித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த சில நாட்களாக தேவராஜ் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று தேவராஜ் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சேகர்பாபுவின் அண்ணன் தற்கொலை செய்து கொண்டது திமுக தொண்டர்கள், அவரது ஆதரவாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து: சேகர்பாபுவை சீண்டிய திமுக எம்.பி

கிச்சன் கீர்த்தனா : கம்பு – பீர்க்கங்காய்த் துவையல்

+1
0
+1
0
+1
5
+1
2
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published.