சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சு நாடு முழுவதும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
இந்த மாநாட்டில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டிருந்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் சேகர்பாபு கலந்துகொண்டது அவர் வகிக்கும் துறைக்கு எதிரானது என்று இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “இந்து மதம் என்ற பெயரும், சனாதனமும் வெவ்வேறல்ல” என்று சனாதன ஒழிப்பு மாநாட்டில் கி. வீரமணி கூறியிருந்ததையும்,
“டெங்கு, மலேரியாவைப் போன்று சனாதனத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும்” என்று அமைச்சர் உதயநிதி கூறியிருந்ததையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை,
“சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்பதைத் திராவிட கழக தலைவர் கி. வீரமணி கூறியிருக்கிறார்.
இதே கூட்டத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசும் போது மேடையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் இருந்தார்.
இந்து மதத்திற்கு எதிரான இந்த வெறுப்புப் பேச்சுக்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒரு பார்வையாளராக வாயை மூடிக்கொண்டிருந்தார்.
எனவே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகிக்கத் தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார்.
செப்டம்பர் 10 ஆம் தேதிக்கு முன் அவர் பதவி விலகவில்லை என்றால் செப்டம்பர் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள தலைமை அலுவலகம் உட்பட மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு அறநிலையத் துறை அலுவலகம் முன்பும் எங்களது போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
பிரியா
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?
திமுக எம்.பி.க்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு!
“உதயநிதியை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்” : மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி கடிதம்!
இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் IndiaStandWithUdaystalin ஹேஸ்டேக்!