” சீமானுக்கு வாய்க்கொழுப்பு” – சேகர்பாபு எச்சரிக்கை!

Published On:

| By Selvam

முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பாடல் பாடியதற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று (ஜூலை 13) கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபுவிடம், கலைஞர் குறித்து சீமான் பாடல் பாடியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சேகர்பாபு, “இன்றைய தமிழக அரசியல் களத்தில் திமுக ஆட்சியை எதிர்க்கின்ற கட்சிகளுக்கு எந்தவிதமான பொருளும் கிடைக்கவில்லை. அதனால் திமுக அரசு மீது அவதூறு பரப்புகிறார்கள்.

காய்ந்த மரம் தான் கல்லடி படும். அதுபோல் சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்பெடுத்து பேசி வருகிறார். அவருடைய உயரம் அவருக்கே தெரியவில்லை. கண்ணாடிக்கூண்டில் இருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். திரும்ப தாக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவர் தாங்க மாட்டார்.

சீமான் மீது பொதுநல விரும்பிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகிறார்கள். சட்டப்படி சாத்தியக்கூறுகள் இருந்தால் அவர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும்.

இதே சாதி குறித்த பேச்சுக்கு சீமான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தார். அதே வார்த்தையை திரும்ப பயன்படுத்துகிறார் என்றால் அரசியல் பார்வை அவரை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகளை பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். சீமான் வாய்க்கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்” என்றார்.

தொடர்ந்து சீமானை கைது செய்ய வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, “சட்டப்படி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று சேகர்பாபு தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விக்கிரவாண்டி: திமுக வெற்றி முகம்… தொண்டர்களுக்கு ஸ்வீட் கொடுத்த ஸ்டாலின்

கலைஞரே சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்! – சீமான் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share