Minister regrets for "Lame excuse"

மாற்றுத்திறனாளிகளிடம் வருத்தம் தெரிவித்த தங்கம் தென்னரசு

அரசியல்

செய்தியாளர் சந்திப்பின் போது நொண்டி சாக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார். Minister regrets for “Lame excuse”

கடந்த நவம்பர் 18 ஆம் தேதி தமிழ்நாடு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் கூடியது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. அப்போது அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த உடன் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “என்ன மசோதா வருகிறது. என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கூட தெரிந்து கொள்ளாமல், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட ஜெயலலிதா பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற மசோதாவிற்கு உயிர் கொடுக்கின்ற போது அவையிலே நின்று அதனை வரவேற்றிருக்க வேண்டிய தார்மீக கடமை இருக்க கூடிய எதிர்க்கட்சித் தலைவர்,

அதிமுகவை சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியே போக வேண்டும் என்பதற்காக ஒரு நொண்டி சாக்கை கண்டுபிடித்து, ஜெயலலிதாவின் பெயரே இல்லாமல் ஒரு மசோதாவை கொண்டு வருகிறீர்கள் என்று சொல்லி வெளிநடப்பு செய்தனர்” என்று தெரிவித்திருந்தார்.

நொண்டி சாக்கு என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு மாற்றுத்திறனாளிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின் போது மாற்றுத்திறனாளிகள் மனம் வருந்தும் படி பேசியதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த நவம்பர் 18 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது,

எனது பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன்.

எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். Minister regrets for “Lame excuse”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

அதிமுகவின் 40 எம்எல்ஏ-க்கள் திமுகவுக்கு வர ரெடியாக இருந்தனர்: அப்பாவு

ED அலுவலகத்தில் இரண்டாவது நாளாக முத்தையா ஆஜர்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *