சிறையில் முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (ஜூலை 25) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, “சிறையில் முதல் வகுப்பில் உள்ள கைதிகளுக்கு உள்ள சலுகைகள் மட்டுமே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறது. கேண்டீனில் உணவு வாங்கி கொள்ள வாரத்திற்கு ரூ.1000 அனுமதிக்கப்படுகிறது. வெளியிலிருந்து எந்த உணவும் கொண்டு வர அனுமதியில்லை. ஏ.சி வசதி போன்றவை வைத்து கொடுக்க முடியாது. அமைச்சர் என்கிற முறையில் செந்தில் பாலாஜிக்கு எந்த ஒரு கூடுதல் சலுகைகளும் வழங்கப்படவில்லை. அம்பேத்கர் படங்களை நீதிமன்றங்களில் வைக்க கூடாது என எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா என்னிடம் தெரிவித்தார்” என்றவரிடம்
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “குற்றவாளிகளை கண்டறிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. கொடநாடு வழக்கில் தவறு செய்தவர்கள் எந்த உயர் பதவியில் இருந்தாலும் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கு: இன்று விசாரணை!
அடுத்த மூன்று மணி நேரம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை?
திருச்சி: மூன்று நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம்!