அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியும், அவர் வேலையை கர்நாடகாவில் போய் காட்டச் சொல்லுங்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் உள்ள ஏழு அடி உயரமுள்ள திருவள்ளுவரின் திருஉருவ சிலைக்கு திருவள்ளுவர் பேரவை, கம்பன் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு திருவள்ளுவரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் கிடைத்த வெற்றி.
செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் முறையாக விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் தப்பிக்க விடமாட்டோம் என்றார்.
பாஜக தலைவர் அண்ணாமலை சுபஸ்ரீ மரண வழக்கை என்னிடம் அளித்தால் குற்றவாளிகளை ஏழே நாளில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியும். கர்நாடகாவில் போய் கண்டுபிடிக்க சொல்லுங்கள் என்று கூறிவிட்டு சென்றார்.
கலை.ரா
சமத்துவ பொங்கல் கொண்டாடிய எடப்பாடி: கரும்புக்காக அடித்துக் கொண்ட கூட்டம்!
திருவள்ளுவர் தினம்: வள்ளுவர் சிலைக்கு முதல்வர் மரியாதை!
அவங்க கட்சியில கே டி ராகவன் பிரச்னையை விசாரிக்க கமிட்டி அமைச்சாரே, அது என்னாச்சு?