அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 19) மீண்டும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கடந்த ஜூலை 17 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணியிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.
இதனிடையே, இரண்டாவது நாளாக நேற்று (ஜூலை 18) அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார் பொன்முடி. மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை இரவு 10 மணிக்கு நிறைவடைந்ததை அடுத்து அவர் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணத்தின் 85ஆவது பிறந்தநாள் விழா சென்னை வில்லிவாக்கத்தில் இன்று (ஜூலை 19) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கலந்து கொண்டு எஸ்றா சற்குணத்திற்கு பொன்னாடை போர்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின்னர் மீண்டும் அமைச்சர் பொன்முடி பொது நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்தி வைப்பு!
அனைத்துக்கட்சி கூட்டம்: அதிமுக சார்பில் பங்கேற்கும் ஓ.பி.ரவீந்திரநாத்