முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அமைச்சர் பொன்முடி

Published On:

| By Jegadeesh

Minister Ponmudi met Chief Minister Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 19) அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

2006-2011 ஆண்டு காலகட்டத்தில் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, செம்மண் குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ள அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து கடந்த  2012 ஆம் ஆண்டு விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த சூழலில் கடந்த ஜூலை 17 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சோதனையின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனிடம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணையும் நடத்தப்பட்டது.

விசாரணையின் முடிவில் அமலாக்கத்துறை நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில், “சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டம் 2002ன் படி, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் ஜூலை 17ஆம் தேதி சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள்,ரொக்கம் ரூ. 81.7 லட்சம் ரொக்கம் சிக்கியது. வெளிநாட்டு கரன்சி (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக. ரூ. 13 லட்சம் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இது தவிர வங்கிக் கணக்கில் நிலையான வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டிருந்த ரூ.41.9 கோடி முடக்கப்பட்டுள்ளது”என்று தெரிவித்து இருந்தது.

இச்சூழலில் தான் நேற்று இரவு பெங்களூருவில் இருந்து சென்னை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று(ஜூலை 19) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் பொன்முடி சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அமலாக்கத்துறை சோதனை மற்றும் விசாரணை குறித்து அவர் முதலமைச்சரிடம் விவரித்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஜி.வி.பிரகாஷின் 100 வது பட அப்டேட்!

அடுத்த டார்கெட் இந்த மூவர்தான்… ஸ்டாலினுக்குக் கிடைத்த டாப் அலர்ட்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share