உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சோதனையின் போது அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்று பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணிக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.
இந்தநிலையில் பொன்முடி தொடர்புடைய இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட விவரங்களை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது.
அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் “PMLA, 2002 சட்டத்தின் கீழ் 17.07.2023 அன்று சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி தொடர்புடைய 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள், ரூ.81.7 லட்சம் ரொக்கம் சிக்கியது. வெளிநாட்டு கரன்சி (பிரிட்டிஷ் பவுண்டுகள்) தோராயமாக ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் ரூ.41.9 கோடி நிரந்தர வைப்புத்தொகை முடக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
“இந்தியாவின் கருத்தியலை பாதுகாப்பதற்கான யுத்தம்” – ராகுல் காந்தி
மோடிக்கு பக்கத்தில் எடப்பாடி… டெல்லியில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்!