திமுகவின் முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கடந்த சில நாட்களாக பருவமழை முன்னெச்செரிக்கை பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.
இந்தநிலையில், அவருக்கு ஃப்ளூ காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விரைவில் சிகிச்சை முடிந்து தனது வழக்கமான பணிகளுக்கு அமைச்சர் நேரு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…