நாற்காலி கொண்டு வருவதற்குத் தாமதமானதால் கோபமடைந்த பால்வளத்துறை அமைச்சர் நாசர் பணியாளர் மீது கல்லைத் தூக்கி எறிந்துள்ளார்.
திருவள்ளூரில் நாளை (ஜனவரி 25) மாலை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த விழாவிற்காகத் திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொதுக்கூட்ட பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று (ஜனவரி 24) திருவள்ளூர் சென்றார். அப்போது அமருவதற்கு நாற்காலி எடுத்துவருமாறு அங்கிருந்த பணியாளரிடம் கேட்டுள்ளார்.
ஆனால் நாற்காலி கொண்டுவரத் தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்து பணியாளர் மீது தூக்கி எறிந்தார்.
அப்போது, ”ஒரு சேர் எடுத்து வாடா, போடா” என்றும் கோபமாகச் சொல்கிறார். அமைச்சர் நாசர் கல்லை தூக்கி வீசும் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதுதான் திராவிட மாடல் அரசா என்று சமூக தளங்களில் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோனிஷா
களமிறங்கிய சஞ்சய் சம்பத், வீடுபிடிக்கும் தங்கமணி, விசிலடிக்கும் குக்கர்- ஈரோடு கிழக்கு அப்டேட்!
மகப்பேறு நல உதவி உயர்வு: அமைச்சர் ஒப்புதல்!