2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று (மார்ச் 21) சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது, காலை சிற்றுண்டி உணவு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு, எல்லைப் பாதுகாப்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கருணை தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தியது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் சேவை என பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்தநிலையில், 2023-24-ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
திமுக அரசு ஆட்சி அமைத்தபிறகு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் மூன்றாவது முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

விவசாயிகள், பொதுமக்களிடம் நேரடியாகவும், கடிதங்கள், மின்னஞ்சல், வாட்ஸப் மூலமாகவும் கருத்துக்கள் கேட்கப்பட்டு வேளாண் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில், இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், பயிர் காப்பீட்டு தொகை அதிகரித்தல், அங்கக வேளாண்மை கொள்கையின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றுவது, வேளாண்மை உழவர் சந்தைகளை மேம்படுத்துவது, நெல், கரும்பு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட வேளாண் பொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்துவது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
வெளிமாநில உருளைக்கிழங்கு: நீலகிரி விவசாயிகள் கவலை!
டிஜிட்டல் திண்ணை: பன்னீர் பூச்சாண்டி- புது பொதுக்குழு… ரெடியாகும் எடப்பாடி